சனி, மார்ச் 16, 2013

சிரியா: 3 ஆண்டுகளாக இடம்பெறும் கலவரத்தில் 70 ஆயிரம் பேர் மரணம் !!

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராடும் மக்கள் புரட்சிப்படையமைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாக போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றமையை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து இராணுவத்தை ஏவி பொது மக்களை கொன்று குவித்து வருவதோடு இராணுவம் நடத்தி வரும் ஏவுணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் இதுவரை 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.  சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருவதோடு பஷர் அல்-ஆசாத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. 

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் இதே கருத்தை கூறி வருகின்றன. ஆனால் அதை ஏற்க ஆசாத் மறுத்து வருவதால் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக