சனி, மார்ச் 30, 2013

தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 24 போலி மருத்துவர்கள் கைது!

  • தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவப்பட்டம் பெறாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த 24 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்கள் கூட டாக்டர்களாக பணிபுரிவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் முழுவதும் உள்ள போலி மருத்துவர் பட்டியலை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு 3 பெண்கள் உட்பட 24 போலி மருத்துவர்களை கைது செய்தனர்.இவர்கள் அனைவரும் 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால், 40க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அடிக்கடி போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகிவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைதானது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக