கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களை, இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க மறுக்கும் அந்நாட்டின் நடவடிக்கைக்கு பதிலடியாக, டெல்லியிலுள்ள இந்திய தூதரை வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு கேரள கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 மீனவர்களை, இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றார்கள். இதையடுத்து கேரளாவில் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து இத்தாலி கடற்படை வீரர்கள் மஸ்ஸிமிலியானோ லதோர், சல்வதோர் கிரேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தாலி கடற்படை வீரர்கள் இரண்டு பேரையும், கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட தங்கள் நாட்டுக்கு அனுப்பும்படி இத்தாலி அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. இத்தாலி து£துரகத்தின் உத்தரவாதத்தின் பேரில், அவர்கள் இரண்டு பேரையும் கேரளா அரசாங்கம் இத்தாலிக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அவர்களை மீண்டும் வழக்கு விசாரணைக்காக இந்தியாவிற்கு அனுப்பமாட்டோம் என்று இத்தாலி அரசு அறிவித்தது. இது கேரள மாநில மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து முறையிட்டனர். மேலும் நாடாளூமன்றத்திலும் இப்பிரச்னை கிளப்பப்பட்டது.இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது,.
இதனிடையே மத்திய அரசு இத்தாலி துதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அதில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் தற்போது டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான இத்தாலியத் தூதரை திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை தொடங்குவதற்கு முன், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள இத்தாலிய நாட்டிற்கான இந்தியத் துதரை திரும்ப அழைத்துக் கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக