வியாழன், மார்ச் 28, 2013

மகாத்மா காந்தியை கொன்ற சதித்திட்டம் திரைப்படமாக உருவாகிறது!

மகாத்மா காந்தியை கொன்ற சதித்திட்டம் திரைப்படமாக உருவாகிறது. நாடு சுதந்திரமடைந்த சில மாதங்களில் 1948ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகள் கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சே என்ற தேச துரோகி காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.


இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு 'The Men Who Killed Gandhi' என்ற பெயரில் உருவாகும் இந்த திரைப்படத்தில், கோட்சே மற்றும் அவன் பின்னணியில் செயல்பட்ட இயக்கங்கள் அனைத்தும் வெட்ட வெளிச்சமாகும் என்று கூறப் படுகிறது.

மனோகர் மல்கோங்கர் என்பவர் எழுதியுள்ள 'The Men Who Killed Gandhi 'புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் தயாராகிறது. சித்தார்த் சென்குப்தா இப்படத்தை இயக்குகிறார்.

அடுத்த ஆண்டு காந்தியின் 66வது நினைவு நாளையொட்டி இந்தப்படம் திரைக்கு வரும் என்று கூறப் படுகிறது.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக