அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த பீரங்கி படை, ராக்கெட்டுகளை தயார் நிலையில் வைக்க வடகொரியா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகொரியா சமீபகாலமாக உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை சோதனை, ராக்கெட் ஏவுதல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 3வது அணு குண்டை வெடித்து சோதனை நடத்தியதால் வடகொரியாவுக்கு உதவிபுரியும் நிதி நிறுவனங்களை அமெரிக்கா முடக்கி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து தீவிர ராணுவ போர் ஒத்திகை நடத்தி வருகின்றன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது விரைவில் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. அத்துடன் போட்டியாக போர் ஒத்திகையையும் நடத்தி வருவதுடன் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் யூன் கடந்த சில வாரமாக அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
இது குறித்து தென்கொரியா ராணுவ அமைச்சகம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் இதுவரை வடகொரியா ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் இது வழக்கமான வெறும் மிரட்டலாக இருக்கலாம் என்று தென்கொரியா அதிகாரிகள் கருதுகின்றனர்.
வடகொரியா கடந்த டிசம்பர் மாதம் நீண்டதூர ராக்கெட் குண்டை ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 1
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக