உத்தரபிரதேச மாநிலம், குந்தா மாவட்டத்தில் போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய ஜியாவுல் ஹக் கடந்த 2ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், கொல்லப்பட்ட டி.எஸ்.பி. குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் போலீஸ் துறையில் வேலை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஜியாவுல் ஹக்கின் மனைவி பர்வீனுக்கு அம்மாநில சுகாதாரத் துறையில் சிறப்பு அதிகாரியாக பணி நியமனம் வழங்கி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். இதேபோல், ஜியாவுல் ஹக்கின் தம்பி சோரப்புக்கு போலீஸ் துறையில் கான்ஸ்டபிள் வேலை வழங்கியும் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி அவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் பணியில் சேர்ந்துள்ளதாக உ.பி. உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக