பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை பற்றி அவதூறாக
செய்தி வெளியிட்ட பிரபல ஆங்கில நாளேடான "டெக்கான் குரோனிக்கல்" உள்ளிட்ட 2
ஆங்கில நாளேடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. "டெக்கான்
குரோனிக்கல்" பத்திரிகை, ஹைதராபாத், கொச்சின் மற்றும் பெங்களூரு
பதிப்புகளிலும் "ஏசியன் ஏஜ்" என்ற இன்னொரு ஆங்கில நாளேட்டிலும் "பாப்புலர்
ஃபிரண்ட்"ஐ சம்மந்தப்படுத்தி, செய்தி ஒன்று வெளியானது.
அதில், அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட
"கோக்ரஜார்" பாதுகாப்பு முகாம்களிலிருந்து 200 குழந்தைகளை கடத்தி வந்து,
அவர்களை கர்நாடகாவிலும் கேரளாவிலுமுள்ள மதரசாக்களில் சேர்த்ததாக
சொல்லப்பட்டிருந்தது.
இந்த செய்தி முற்றிலும்
தவறானது - அவதூறானது, என பாப்புலர் ஃபிரண்டின் பொதுச்செயலாளர் O.M.A. சலாம்
தெரிவித்தார்.
மேலும், பத்திரிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது
போல "ஹனபி மதரசா" என்ற பெயரில் பெங்களூருவில் ஒரு மதரசாவே இல்லை என்று
தெரிவித்த சலாம், இத்தகைய அவதூறு செய்திகளை வெளியிட்ட இந்த நாளேடுகள்,
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்.
தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றும்
நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது,என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக