சனி, மார்ச் 16, 2013

! தமிழகத்தில் புத்த பிக்குகள் ஓட ஓட விரட்டித் தாக்குதல்!

தஞ்சைப்பெரிய கோயிலை சுற்றிப் பார்க்க இலங்கையில் இருந்து வந்த புத்த பிக்குகள் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்டுள்ளனர்.



தமிழகம் முழுவதும் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகிற நிலையில், இலங்கையிலிருந்து சிங்கள புத்த பிட்சுகள் குழு ஒன்று தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்தது.

இக்குழுவினர் இன்று தஞ்சை பெரிய கோயில் அருகே வந்தபோது, இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த, பழனி ராஜேந்திரன் தலைமையிலான தமிழ்தேச பொதுவுடைமை கட்சியை சேர்ந்தவர்கள், மற்றும் நாம் தமிழர் கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர், புத்த பிட்சுகளை சுற்றி வளைத்து அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த அவர்கள், ஒரு கட்டத்தில் வெளியேறக் கூறியவர்களை நோக்கி அடிக்க கையை ஓங்கினர். மேலும் அவகளுடன் வந்த தாய்லாந்து நாடடை சேர்ந்த புத்த பிட்சு ஒருவரும் அடிக்க பாய்ந்தார்.
இதனால் ஆத்திரமுற்ற பொதுவுடைமை கட்சியினர் அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர்.

இதிலொரு புத்த பிட்சு தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதர புத்த பிட்சுகள் ஆளுக்கு ஒரு திசையில் ஓடி போலீசார் உதவியுடன் அஙகுள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
தமிழ் நாட்டில் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களால் புத்த பிக்குகள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டமை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக