வியாழன், ஏப்ரல் 03, 2014

அமிர்தானந்தமயி பற்றிய நூல்: டிசி புத்தக நிலையம் மீது தாக்குதல்!

கேரளாவில் சர்ச்சைக்குரிய பெண் போலிச்சாமியார் மாதா அமிர்தானந்தமயி குறித்து புத்தகம் வெளியிட்டதன் பேரில் பிரபல டி.சி புத்தக நிலையத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.


கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள டி.சி புத்தக நிலையம் மீது இத்தாக்குதல் நடத்தபப்ட்டது. டி.சி புக்ஸின் கோட்டயம் பிரிவு உரிமையாளரும், வெளியீட்டாளருமான ரவியின் வீட்டின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
புத்தக நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் புத்தகத்தை கிழித்து எறிந்ததுடன் சம்பவ இடத்தில் காவிக்கொடியை விட்டுச் சென்றுள்ளனர். மேலும் அமிர்தானந்தமயிக்கு எதிராக பிரச்சாரத்தில் இருந்து டி.சி புக்ஸ் விலகவேண்டும் என்ற போஸ்டரையும் ஒட்டியுள்ளனர்.
புத்தகத்தின் ஷெல்ஃப்களை உடைத்ததோடு, அங்குள்ள பணியாளர்களையும் மிரட்டியுள்ளனர். இத்தகைய நூல்களை வெளியிட்டால் பின்விளைவுகள் பயங்கரமாகயிருக்கும் என்று மிரட்டியுள்ளனர். கோட்டயம் போலீஸ் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக