வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடக்கிறது.மக்களவை தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் அசாம் மற்றும் திரிபுரா ஆகிய 2 மாநிலங்க ளில் உள்ள 6 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் நடந்தது.
அசாமில் 72 சதவீத வாக்குகளும், திரிபுராவில் 84 சதவீத வாக்குகளும் பதிவாயின. அருணாச்சலப் பிரதேசம், மேகாலாயாவில் தலா 2 தொகுதிகளிலும், நாகா லாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும் 2ம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 சட்டசபை தொகுதிகளில் 49 தொகுதிகளில் இன்று சட்டசபை தேர்தலும் நடக்கிறது.
மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரே மக்களவை தொகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்தல், மாநிலம் தழுவிய பந்த் காரணமாக 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திரிபுரா முகாம்களில் தங்கியுள்ள ப்ரூ இன மக்களுக்கு தபால் ஓட்டுரிமை அளிக்கப்பட்டதற்கு எதிராக இந்த பந்த் நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக