மஹராஷ்ட்ரா மாநிலத்தில் கர்நாடாகா எல்லைக்கு அருகே இருக்கும் ஊர் ககல் டவுன். இங்கு லட்சுமி ஹில் பகுதியில் வெடிக்குண்டு தொழிற்சாலை இயங்கி வந்ததை கோல்ஹாபூர் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிருந்து ஜெலட்டின் குச்சிகள், ரிமோட் சுவிட்சுகள், ரிமோட் கண்ட்ரோல் உபகரணங்கள், ஸ்க்ரூ ட்ரைவர்கள், ஸ்டீல் கிளிப்புகள், வயர் கட்டர்கள், வாள், கத்தரிகோல், சுத்தியல்கள், பேட்டரி செல்கள், மின்சார கட்டுப்பாட்டு உபகரணம், எனர்ஜி சர்க்யூட் வயர், சுவிட்ச் கார்ட் மற்றும் காகிதத்துண்டுகளில் வரையப்பட்ட வரைப்படங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அஜிங்யா மனோகர் போபடே(வயது 22), அனிகட் பிவாஜி மாலி(வயது 22),நிலேஷ் பபன்ராவு பாடீல்(வயது 20) அனில் பொபாட் கராசே(வயது 26) ஆகியோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இதுக்குறித்து ககல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கூறியது:வெடிக்குண்டை தயாரிக்க தேவையான பொருட்களை பாடீல் மற்றும் கராஸே சப்ளைச் செய்ததற்காக கைதுச் செய்யப்பட்டனர். போபடே மற்றும் மாலி ஆகியோர் வெடிக்குண்டை தயாரித்ததற்காக கைதுச் செய்யப்பட்டனர். போபடே எலக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ படித்தவர். மாலி வயர்மெனாக பணியாற்றுபவர்.
இவர்கள் அதிநவீன உபகரணங்களை தயாரித்துள்ளனர்.விலை உயர்ந்த கார்களில் வெடிக்குண்டை வெடிக்க வைக்க உதவும் எலக்ட்ரானிக் லாக்கிங் சிஸ்டமாக இதனை பயன்படுத்த முடியும்’ என்றார். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. மஹராஷ்ட்ரா மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் வேளையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட இவர்கள் குண்டுகளை தயாரித்திருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. வெடிப்பொருட்களை இவர்களுக்கு யார் சப்ளைச் செய்தார்கள் என்பதுக் குறித்தும் இவர்கள் யாருக்கு வெடிக்குண்டுகளை தயாரித்து விற்றார்கள் என்பதுக் குறித்தும் போலீஸ் விசார்ணை நடத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக