ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை கைதட்டி வரவேற்ற ஜம்மு காஷ்மீர் மாணவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மீரட் சுவாமி விவேகானந்த் சுபார்தி பல்கலைக் கழகத்தில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது.
அப்போது போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாணவர்கள், பாகிஸ்தான் வென்றதை கைதட்டி கொண்டாடியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க கலகம் மூண்டுள்ளது. இதைத் தொடர்ந்து கல்வி நிறுவனத்தை விட்டு ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் மீது தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கை தட்டியதற்காக தேசத் துரோக வழக்கு போடுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் ஒமர் அப்துல்லா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக