பிப்ரவரி 17 அன்று லிபிய அரசை கவிழ்க்க நடந்த புரட்சி சதியின் பின்னால் அபுதாபி இளவரசரின் பங்கு இருந்ததாக வெளியாகியுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் மல்லிகை புரட்சி எனப்படும் மக்கள் புரட்சியின் மூலம் லிபியா, எகிப்து, துனிஷியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அது வரை மேற்கண்ட நாடுகளில் சர்வதிகாரிகளாக இருந்தவர்களுக்கும் வளைகுடா நாடுகளின் அதிபர்களுக்கும் நெருங்கிய உறவு இருந்தது.
ஆனால், இப்புரட்சிக்கு பின் ஆட்சிக்கு வந்த இக்வானுல் முஸ்லீமின் எனப்படும் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பை சார்ந்தவர்களால் தங்கள் நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழுமோ எனும் அச்சத்தில் வளைகுடா நாடுகள் மேற்கண்ட அரபு நாடுகளுடன் மோதல் போக்கை மேற்கொண்டதோடு பதவி நீக்கம் செய்யப்பட்ட சர்வதிகாரிகளுக்கு ஆதரவாகவும் இருந்து வந்தது.
சென்ற ஆண்டு ஜுலை 3 அன்று சவூதி இளவரசர்களின் ஒருவரான பந்தர் சுல்தானின் திட்டப்படி எகிப்து அரசு கவிழ்க்கப்பட்டு சிசி தலைமையில் ராணுவம் எகிப்தை ஆட்சி செய்து வருவதோடு ஆட்சியில் இருந்த அதிபர் முர்சியும் அவரது ஆதரவாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது போல் பிற நாடுகளிலும் புதிய அரசுகளுக்கு எதிரான போராட்டங்களை சவூதி அரேபியா இயக்கி வரும் செய்திகள் வெளியாகும் சூழலில் கடந்த வாரம் நடந்த லிபியா ஆட்சி கவிழ்ப்பு சதி பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிப்ரவரி 17 அன்று லிபிய அரசை கவிழ்க்க நடந்த ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டு மேஜர் ஜெனரல் கலீபா ஹப்தார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அபுதாபி இளவரசர் ஷேக் முஹம்மத் இத்திட்டம் நிறைவேற ஏராளமான நிதியுதவி அளித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சர்ச்சைக்குரிய சவூதி இளவரசர் பந்தரின் ஆலோசனையில் உருவான இத்திட்டத்தை ஷேக் முஹம்மத் துபாயின் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியான முஹமது தெஹ்லானின் உதவியுடன் செய்துள்ளார் என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டு மொத்த மத்திய கிழக்கையும் இஹ்வான்கள் கைப்பற்ற சதி செய்கின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியவர் தெஹ்லான் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக