ஞாயிறு, மார்ச் 02, 2014

இரட்டை நீதியா?,, மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி..


நடிகர் சஞ்சய் தத்துக்கு தொடர்ந்து வழங்கப்படும் பரேல் ஏன்? என மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனது மகள் இறப்புக்கு செல்ல அனுமதி கோரி நகுல் என்பவர் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்ற நாகபுரி கிளை நீதிமன்றத்தின் நீதிபதிகள் பூஷண் கவாய், அதுல் சந்துர்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதே போன்ற வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் உயிரிழந்த தனது மகளை பார்ப்பதற்கு கூட பரோல் மறுக்கப்பட்டு வருவது குறித்து கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகர் சஞ்சய்தத்துக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏன்? என மஹாராஷ்டிர அரசிடம் மும்பை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக பரோல் கேட்டு நகுல் சார்பில் வழக்குரைஞர் மீர் நாக்மன் அலி ஆஜராகி வாதிடும் போது, "உயிரிழந்த தனது மகளைப் பார்ப்பதற்கு நகுல் பரோல் கேட்டு பிப்ரவரி 14ஆம் திகதி நாகபுரி மண்டல ஆணையரிடம் விண்ணப்பித்திருந்தார். 10 நாள்கள் ஆகியும் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை' என்று குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக