பணிந்தது தமிழக அரசு..!!!
கோரிக்கையை பரிசீலிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு..!!
நிபந்தனையுடன் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார் தடா.அப்துல்
ரஹீம்..!!
கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி,
இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா.அப்துல் ரஹீம் அவர்களின்
தலைமையில் ,
அக்கட்சியினர் சென்னையில் ,
கடந்த ஐந்து நாட்களாக சாகும் வரை பட்டினி போராட்டம் நடத்திக்
கொண்டிருந்தனர்.
போராட்டத்தை கைவிட சொல்லி அரசு தரப்பில் இருந்து வந்த பல்வேறு
கோரிக்கைகளையும் சகோதரர் தடா.ரஹீம் அவர்கள் நிராகரித்து
விட்டார்கள். ஆகையால் அவரை கைது செய்து இராயப்பேட்டை அரசு
மருத்துவமனையில் வைத்து,
வலுக்கட்டாயமாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தமிழக அரசு.
இந்திலையில் போராட்டம் கட்டுகடங்காமல் போகவே,
ஆட்டம் கண்ட தமிழக அரசு,
தலைமைச் செயளாலர் ,
அளவிலான அதிகாரிகள் முதல்வரின் தனிச் செயலாளரை சந்திக்க
உடணடியாக ஏற்பாடு செய்தனர்
.
இதையடுத்து தடா.அப்துல் ரஹீம் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை
பெற்றுக் கொண்ட முதல்வரின் தனிச் செயலாளர் ,
15. நாட்களுக்குள் முடிவை அறிவிக்கின்றோம். என்று கூறியதற்கு ,
தடா.அப்துல் ரஹீம் அவர்கள்,
15 நாட்களுக்குள் சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை யென்றால்
தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும் என எச்சரித்து விட்டு.,
தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளார்கள்.்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக