புதன், மார்ச் 05, 2014

வேலூருக்காக அடம்பிடித்த முஸ்லிம் லீக் - நெல்லையை கொடுத்த திமுக!.....

தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. இந்த கூட்டணியில் பங்கேற்கும்ச்கட்சிக்கு ஒரு ஸீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இம்முறை ஏணி சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல்களில் இக்கட்சி தி.மு.கவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் வேலூர் தொகுதியையே கேட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராடிப் பார்த்தது. ஆனால் கடைசியில் நெல்லை தொகுதியை முஸ்லிம் லீக்கிடம் கொடுக்க இருக்கிறது திமுக. திமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

இந்த பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் வேலூர் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டனர். அத்துடன் மயிலாடுதுறை, திருநெல்வேலி அல்லது திருச்சியையும் கேட்டது முஸ்லிம் லீக்.

ஆனால் 2 முறை வேலூர் தொகுதியை கொடுத்து இருப்பதால் இந்த முறை ராமநாதபுரத்தை எடுத்துக் கொள்ளுமாறு திமுக கோரியது. ஆனால் முஸ்லிம் லீக் இதை ஏற்கவில்லை. அத்துடன் திருச்சியை முஸ்லிம் லீக் கேட்டது. ஆனால் திமுக நிராகரித்தது. 

இதனால் திண்டுக்கல் தொகுதியை எடுத்துக் கொள்ளுமாறு திமுக கேட்டது. அதையும் முஸ்லிம் லீக் நிராகரிக்க கடைசியாக நெல்லை தொகுதியை ஒதுக்க திமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர் 

அதே நேரத்தில் பெரிய கூட்டணிக் கட்சிகள் இல்லாத நிலையில் 2 தொகுதிகளை திமுக ஒதுக்கி இருக்கலாம் என்ற அதிருப்தியும் முஸ்லிம் லீக் கட்சியினரிடம் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக