ஞாயிறு, மார்ச் 02, 2014

யாரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! – பாஜகவின் திமிர் விளக்கம்!


“குஜராத் கலவரத்தையோ அல்லது முன்பு நடைபெற்ற சம்பவங்களையோ குறிப்பிட்டு முஸ்லிம் மக்களிடம் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்கவில்லை” என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

சில முஸ்லிம்கள் மத்தியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய ராஜ்நாத் சிங், “முஸ்லிகளுக்கு எங்கள் கட்சி சார்பில் ஏதாவது குறைபாடுகளோ அல்லது தவறுகளோ நடைபெற்றிருந்தால் தலைவணங்கி மன்னிப்பு கோரத் தயாராக உள்ளோம். எங்களுக்கு ஆட்சியமைக்க ஒரு வாய்ப்பளியுங்கள்” என்று கூறியிருந்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கருத்து தெரிவித்த முக்தார் அப்பாஸ் நக்வி, “முன்பு நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் யாரிடமும் மன்னிப்பு கோரவில்லை. யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் எங்கள் கட்சிக்கு எழவில்லை” என்று கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக