சனி, மார்ச் 01, 2014

தாமிரபரணியிலிருந்து கோக், பெப்சி நிறுவனங்களுக்கு நீர் வழங்கக் கூடாது: எஸ்.டி.பி.ஐ கட்சி


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தாமிரபரணியை மீட்போம், மனிதகுலம் காப்போம்” என்ற முழக்கத்துடன் எஸ்.டி.பி.ஐ  கட்சி தாமிரபரணி பாதுகாப்பு பிரச்சார இயக்கம் ஒன்றினை கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் நெல்லை மற்றும் தூத்துக்குடி  மாவட்டங்களில் நடத்தி வருகிறது.



இப்பிரச்சார இயக்கத்தின் நிறைவாக மார்ச் 1 அன்று காலை 11 மணிக்கு நெல்லை அம்பாசமுத்திரத்தில் கட்சியின் மாநில தலைவர்  தலைமையில் நடைபெறும் நடைபயணத்தை அம்பை வட்டார பங்குத் தந்தை சைமன் செல்வன் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்.

முதல் நாள் இரவு பத்தமடையில் தங்கும் நடைபயணக்குழு 2ம் தேதி காலை பத்தமடையில் இருந்து புறப்பட்டு மாலை பாளை ஜவகர் திடலை அடைகிறது. 

அதனைத் தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தாமிரபரணியின் சுகாதார சீர்கேடுகளை  கலைந்திடவும், மணல் திருட்டினை தடுத்திடவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தாமிரபரணியிலிருந்து நீர் வழங்கக் கூடாது, 

கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள்  வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக