ஞாயிறு, மார்ச் 02, 2014

வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகை மலை போத்துராவுத்தன் பட்டியில் சட்ட விரோதமாக வெடிபொருள்ட்கள் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர். 



போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முருகேசன் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 183 ஜெலட்டன் குச்சிகளும், 125 எலக்ரிக் டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த டிராக்டரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 ஜெலட்டன் குச்சிகள், 30 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்ப்பட்டது. 

முருகேசன், சண்முகம், தங்கராஜ், சுப்பிரமணியம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக