மதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே கடந்த மாதம்
சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கியூ பிரிவு
போலீசார் தீவிர விசாரணை நடத்தி மேலூரில் பதுங்கி இருந்த சிவகங்கையை சேர்ந்த
திருச்செல்வம் என்ற தீவிரவாதி கைதுசெய்யப்பட்டான் . இவர் தமிழர் விடுதலைப்படை அமைப்பை
சேர்ந்தவர் ஆவார். மேலும் இந்த அமைப்பைச் சேர்ந்த சினிமா டைரக்டர்
தங்கராஜ், கவியரசன் என்ற ராஜா ஆகிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழர் விடுதலைப்படையின் ஆதரவாளர்களும், திருச்செல்வத்தின் நண்பர்களும் பல இடங்களில் தங்கி இருப்பது தெரியவந்தது.
அதன்படி மதுரை திருநகர் மகாலட்சுமி காலனி பெரியார் தெருவில் உள்ள கார்த்திக் என்பவர் வீட்டில் இன்று காலை உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி. சரவணக்குமார், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் 5 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
சோதனையின்போது கார்த்திக்கின் வீட்டில் அவரது பெற்றோர் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, எங்கள் மகன் கார்த்திக் வீட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவ்வப்போது தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்வான் என்று கூறினர். இதையடுத்து போலீசார் அவரை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
ஏராளமான போலீசார் சோதனைக்காக குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக