மாலேகான் குண்டுவெடிப்பு "குற்றவாளி" பெண் சாமியாரிணி "பிரக்யா சிங்" டாகூரை நேற்று ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், பா.ஜ.க.வின் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர், உமாபாரதி. குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தி வரும் "காவி பயங்கரவாதிகளுக்கு" பா.ஜ.க.வின் பேராதரவு உண்டு என்பதில் யாருக்கும் ஐயமில்லை. குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை சிக்கவைப்பதில் "உளவுத்துறையின்
உதவிகளும்" பா.ஜ.க.வுக்கு பூரணமாக உண்டு. இதையெல்லாம் கடந்து, பல குண்டுவெடிப்பில் "காவி
பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பு" வெளிப்பட்டு, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் "கம்பி" எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.உதவிகளும்" பா.ஜ.க.வுக்கு பூரணமாக உண்டு. இதையெல்லாம் கடந்து, பல குண்டுவெடிப்பில் "காவி
கைதாகி சிறை செல்பவர்களின் குடும்பங்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் பா.ஜ.க.வினர் நிறைவேற்றி வருவதுடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை.
இதுவரை வெளியிலிருந்து தீவிரவாதிகளை ஆதரித்து வந்த பா.ஜ.க., தற்போது நேரடியாக களத்தில் இறங்கி, காவி பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கவும் - அவர்களை காப்பாற்றவும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.
அதன் வெளிப்பாடு தான், மாலேகானில் குண்டுவைத்த "பெண் சாமியாரிணி பிரக்யா சிங் டாகூரை" போபாலில் உள்ள சென்ட்ரல் ஜெயிலுக்கே நேரில் சென்று சந்தித்துள்ளார், பா.ஜ.க.வின் உமாபாரதி.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங், பலமுறை ஜாமீன் கேட்டும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது, குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக