வியாழன், டிசம்பர் 06, 2012

உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா, மன்மோகன்

வாஷிங்டன்: உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சித் தலைவர்  சோனியா காந்தி 12 வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 19 வது இடத்திலும்  உள்ளனர்.  

உலகளவில் செல்வாக்கு உள்ளவர்களின் இந்த ஆண்டுக்கான பட்டியலை,  அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல 'போர்ப்ஸ்’ பத்திரிகை  வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் உலகளவில் செல்வாக்குள்ளவர்களாக 71 பேர்  இடம்பெற்றுள்ளனர்.இதில் முதலிடத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பிடித்துள்ளார். 

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 4 வது இடத்திலும்,போப் பெனடிக்ட்  5வது இடத்திலும் உள்ளனர். 

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷ்ய அதிபர் புடின், சவுதி மன்னர் அப்துல்லா  பின் அப்துல்லாசிஸ் அல் சவுத், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர்  முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர். 

இந்தியாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 12 வது இடத்தையும், பிரதமர்  மன்மோகன் சிங் 19 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இது குறித்து போர்ப்ஸ் எக்சியூட்டிவ் எடிட்டர் மைக்கேல் நோயர் கூறுகையில்,"ஆட்சி  மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு செல்வாக்கு உள்ளவர்களின் பட்டியலில் சீன அதிபர்  ஹூ ஜின்டாவோ 3வது இடத்தில் இருந்தார். தற்போது அடுத்த அதிபராக ஜி ஜின்பிங்  தேர்ந்தெடுக்கபட்டுள்ளதால், ஜின்டாவோ 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்" என்றார்.

இதேபோல் கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற அமெரிக்க வெளியுறவுத்  துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை.

மேலும், 28 வயதாகும் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் 25 வது  இடத்திலும், 81 வயதாகும் மீடியா அதிபர் ரூபர்ட் முர்டோச் 26 வது இடத்தையும்  பிடித்துள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக