டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 4 குற்றவாளிகளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மாணவியை அடிக்கப் பயன்படுத்திய இரும்புக் கம்பியும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் தனியார் பேருந்தில் பயணித்தபோது ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த பாலியல் கொடுமையை அரங்கேற்றியது. பின்னர் பாலம் ஒன்றில் அப்பெண் தூக்கி வீசப்பட்டார். அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்தின் ஓட்டுநரான ராம் சிங்கும், அவரது தம்பி முகேசும் இவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர மேலும் 4 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணவியையும், அவரது நண்பரையும் தாக்கப் பயன்படுத்திய இரும்புக் கம்பியையையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக