டப்ளின்:அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்மவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் அங்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் மரணமடைந்தார். இந்நிலையில் சவீதா மரணமடைந்து ஏழு வாரங்கள் ஆன பிறகு இந்த சட்டம்
அங்கு கொண்டுவரப்படுகிறது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்க அங்கு சட்டம் கொண்டுவரப்படுகிறது. கருக்கலைப்புக்கு குறித்த விஷயத்துக்கு சட்ட ரீதியாக ஒரு தெளிவைக் கொண்டுவர அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை அடுத்தே அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
தற்போது அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்ட விரோதமான ஒன்றாக உள்ளது. தாயின் உயிருக்கு குறிப்பிடத் தகுந்த அளவுக்கு ஆபத்து உள்ளது என்று கருதப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் சூழல் இருக்கிறது. எனினும் இதுவரை மருத்துவர்கள் எத்தகைய சூழலில் உறுதியாக கருக்கலைப்பை செய்யலாம் என்பது குறித்து அரசு எந்தச் சட்டத்தையும் இயற்றவில்லை.
மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை கடைபிடிக்கும் வகையில், அயர்லாந்து அரசின் நடவடிக்கை அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக