ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே டியாயு என்ற தீவுக்கூட்டம் ஒன்று உள்ளது. இந்த தீவுகளை ஜப்பான், சீனா இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த தீவுகள் ஜப்பானை சேர்ந்த தனியாருக்கு சொந்தமாக இருந்தன. அவற்றை ஜப்பான் விலைகொடுத்து வாங்குவதாக அறிவித்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
நேற்று தீவுகளை வாங்கும் பணிகள் முடிந்துவிட்டன என்று ஜப்பான் அறிவித்தது. இதனால் சீனா கடும் கோபம் அடைந்து உள்ளது. 2 போர்க்கப்பல்களை அங்கு உடனடியாக அனுப்பி வைத்து உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என்ற பதட்டம் உருவாகி உள்ளது.
இதுதொடர்பாக சீனாவின் ராணுவ பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் ஜப்பான் நெருப்போடு விளையாடுகிறது. பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. எனவே நாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறப்பட்டுள்ளது.
ஜப்பான், சீனா உரிமை கொண்டாடும் அதே தீவுக்கு தைவான் நாடும் உரிமை கொண்டாடுகிறது. நேற்று தீவுகளை ஜப்பான் வாங்கிவிட்டதாக அறிவித்ததும், தைவான் ஜப்பானுக்கான தங்கள் நாட்டு தூதரை வாபஸ் பெற்றுவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக