சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது பாராளுமன்றம் மற்றும் தேசிய சின்னத்தை கேலியாக சித்தரித்து வரையப்பட்ட ஓவியங்கள் இடம்பெற்று இருந்தன. இவற்றை கான்பூரை சேர்ந்த ஓவியர் கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி வரைந்து இருந்தார்.இதனை எதிர்த்து இந்திய குடியரசு கட்சி பிரமுகர் தொடர்ந்த புகாரின் பேரில் திரிவேதி கடந்த சனிக்கிழமை மும்பையில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டார். என் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் வரை ஜாமீனில் வரமாட்டேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தேச துரோக குற்றச்சாட்டை நீக்குவது பற்றி 17-ந் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். அவர் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக