வியாழன், செப்டம்பர் 13, 2012

காஸ்மியின் குடும்ப சிறுவனை கடத்த முயன்ற டெல்லி ஸ்பெஷல் ப்ராஞ்ச்: முறியடித்த பொதுமக்கள் !

Bid to pick Kazmi’s relative foiled; Hundreds come out to protestபுதுடெல்லி:இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யத் அஹ்மத் முஹம்மது காஸ்மியின் சகோதரி மகனான பள்ளிச் சிறுவனை கடத்த முயன்ற டெல்லி ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீசாரின் முயற்சியை ஜாமியா நகர் பொதுமக்கள் முறியடித்தனர். இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. காஸ்மியின் சகோதரி
மகனான 16 வயது ஹஸன் அஹ்மத் வீட்டில் இருந்து டியூசன் படிக்கச் செல்வதற்காக வெளியே வந்தபொழுது சாதாரண உடையில் வந்த டெல்லி க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் சிறுவனை வலுக்கட்டாயமாக கடத்திச் செல்ல முயன்றனர். சிறுவனின் அழுகுரலை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் அங்கு திரண்டு அவனை போலீசாரின் பிடியில் இருந்து மீட்டனர். பின்னர் கடத்த முயன்ற போலீசாரையும் நன்றாக கவனித்தனர். இதில் சிலர் தப்பி ஓடிவிட்டனர். மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையைச் சார்ந்தவர்கள் என்று போலீசார் கூறியபோதிலும், அவர்களின் கைவசம் டெல்லி ஸ்பெஷல் போலீசின் அடையாள அட்டை இருந்ததாக காஸ்மியின் மகன் ஷவ்ஸாப் கூறுகிறார்.
உள்ளூர் போலீசார் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ ஆஸிஃப் முஹம்மது கான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த போலீசாரை பேச்சுவார்த்தை நடத்தி மீட்டனர். அதேவேளையில் டெல்லி ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேவேளையில் கார் திருடர்களை பிடிக்க வந்த வாகனத் திருட்டு எதிர்ப்பு போலீஸாரை பொதுமக்கள் பிடித்து வைத்ததாக போலீஸ் குற்றம் சாட்டியது.
அநீதமாக சிறையில் வைத்திருப்பது மற்றும் ஜாமீன் கோரி காஸ்மி அளித்த மனுவில் மத்திய-மாநில அரசுகள், அட்டர்னி ஜெனரல் ஆகியோரிடம் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் அளித்த புகாரை வாபஸ் பெறக்கோரி மிரட்டல்கள் வருவதாகவும், தற்பொழுது உறவினர்களை துன்புறுத்த முயற்சிகள் நடப்பதாகவும் ஷவ்ஸாப் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக