வியாழன், செப்டம்பர் 13, 2012

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடமில்லை !

No Indian varsity in world's top 200 listபுதுடெல்லி:உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக் கழகமும் இடம் பிடிக்கவில்லை. உயர் கல்வித்துறையின் தரம் குறித்த மதிப்பீடுச் செய்யும் பிரபல நிறுவனமான க்யூ.எஸ்ஸின் உலக பல்கலைக் கழகங்கள் தரம்-2012 அறிக்கையில் இந்தியாவில் உயர் கல்வித் துறையின் பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி இன்ஸ்ட்யூட்டுகள் ஆகியவற்றி
தரம் தாழ்ந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2010-ஆம் ஆண்டு 187-வது இடத்தை பிடித்த மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி, இவ்வருடம் 227-வது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி ஐ.ஐ.டி 212-வது இடத்தைப் பிடித்துள்ளது. கான்பூர் ஐ.ஐ.டி 278-வது இடத்தில் உள்ளது. ப்ரிக்ஸ்(பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) நாடுகளில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமே முதல் 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
உலகிலேயே மிகச்சிறந்த பல்கலைக்கழகமாக முதலிடத்தை மாஸேசூட்ஸ் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி பிடித்துள்ளது. ஆசியாவில் உள்ள 50 பல்கலைக் கழகங்கள் உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஆசியாவில் உள்ள மிகச்சிறந்த 300 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து வெறும் 11 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக