வியாழன், செப்டம்பர் 13, 2012

கற்பழிக்க முயன்ற கயவனை கொலை செய்ததற்கு 4 ஆண்டுகள் சிறையா?

கற்பழிக்க முயற்சித்தவரை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணுக்கு, சீனாவில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சுவான் சியோகி, 19. கடந்த மே மாதம், ரயிலை தவற விட்டு, குவாங்சூ ரயில் நிலையத்தில், தவித்து நின்ற அவரை, தனது வீட்டில் தங்கிக் கொள்ளும்படி அழைத்துள்ளார், சுமை தூக்கும் தொழிலாளி, யாங்க் ஜின்யுவான், 50. யாங்கின் பேச்சை நம்பி, அவரது வீட்டுக்குச் சென்றார் சியோகி. ஆனால், சியோகியை, யாங்க்
கற்பழிக்க முயற்சித்துள்ளார். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, அங்கிருந்த கத்தியை எடுத்து யாங்க்கை சரமாரியாகக் குத்தினார் சியோகி. இதில், யாங்க் இறந்தார். இந்த வழக்கை விசாரித்த குவாங்டாங் நீதிமன்றம், சியோகிவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதற்கு, இணையதளங்களில் பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக