வியாழன், செப்டம்பர் 13, 2012

ஐ போன் 5 அதிரடி அறிமுகம் !

சந்தையே ஆவலுடன் எதிர்பார்த்த ஐ போன் 5 ஐ ஆப்பிள் நிறுவனம் இன்று வெளியிட்டது. அதன் முந்தைய தயாரிப்பான ஐ போன் 4 எஸ் ஸை விட பெரியதாய், மெல்லியதாய் வந்திருக்கும் ஐ போன் 5ன் விலை ஏறக்குறைய ஐ போன் 4 அளவே என்பது குறிப்பிடத்தக்கது. நோக்கியா கொடி கட்டி பறந்த மொபைல் சந்தையில் தன்னுடைய ஸ்மார்ட் போன் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனி முத்திரை பதித்தது. சமீப காலங்களில் ஆப்பிளின் ஐ போனுக்கு போட்டியாக சாம்சுங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆண்ட்ராய்டில் இயங்கும் போன்களை குவித்ததில் ஆப்பிளின் விற்பனையில் சற்றே
தொய்வு ஏற்பட்டது. சமீபத்தில் காப்பிரைட் விவகாரத்தில் சாம்சங்குக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐ போன் 5 ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. இன்று நடந்த அறிமுக விழாவில் ஐ போன் 5 வெளியிடப்பட்டது.
ஐ போன் 4 எஸ்ஸை விட 18% மெல்லியதாக இருக்கும் ஐ போன் 5 வெறும் 7.66 மி,மீ தடிமனும் 112 கிராம் எடையும் கொண்டதாகும். இது ஐ போன் 4 எஸ்ஸை விட 20% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஐ போன் திரையும் வழக்கமான 3.5 இஞ்சிலிருந்து 4 இஞ்சாக அதிகரித்துள்ளதோடு 4 எஸ்ஸை விட இரண்டு மடங்கு வேகமாக இயங்கும் வகையில் ப்ராஸ்ஸர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழுவதும் கண்ணாடி மற்றும் அலுமினியத்தால் ஆன ஐ போன் 5 தன்னுடைய பேட்டரி இயங்கும் நேரத்தையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 8 மெகாபிக்ஸல் கேமராவுடன் வந்துள்ள ஐ போன் 5 4 ஜி டெக்னாலஜியுடன் வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக