வியாழன், செப்டம்பர் 06, 2012

மனித கேடயங்களாக” பலஸ்தீனிய குழந்தைகள் - யூத இராணுவத்தின் இன்னொரு அக்கிரமம்! (வீடியோ இணைப்பு) !

உலகில் மோதல்கள் பல நடைபெற்றுள்ளன. அப்போதெல்லாம் எதிரியை உயிருடன் கைப்பற்றிய மற்ற தரப்பினர் அவர்களை அடிமைகளாக தங்கள் தேசங்களிற்கு இட்டு செல்வர். கைதிகளாக சிறையிலடைப்பார்கள். சில வேளைகளில் மொத்தமாக அவர்களை படுகொலை செய்து விடுவார்கள். இது நாம் கண்ட வரலாறு. சியோனிஸ தேசமான இஸ்ரேலின் வீரர்கள் காஸாவினுள்ளோ, மேற்குகரையினுள்ளோ நுழைந்த அடுத்த மாத்திரத்தில் இந்திபாதா புரட்சியின் கற்கள் அவர்கள் வானங்களை இலக்கு வைக்கும். கவச வாகனங்களில் பதுங்கியவாறே இவர்கள் பலஸ்தீன
நிலப்பரப்புகளில் பிரவேசிப்பர்.
இந்த கோழைகளின் உயிர் பயம் போல உலகில் யாருக்கும் உயிர் பயம் கிடையாது. இப்போது இவர்கள் தங்களால் கைது செய்யப்பட்ட பலஸ்தீன இளம் சிறார்களை தங்கள் வானங்களின் முகப்பில் கட்டி அவர்களை “மனித கேடயங்களாக” வைத்து முன்னேறுகிறார்கள். ஒன்று சண்டையில் அந்த சிறுவன் கொல்லப்படுவான். அல்லது சண்டையை சாக்காக வைத்து யூத இராணுவம் அந்த சிறுவனை சுடும். இறுதி விளைவு, ஒரு பலஸ்தீன குழந்தையின் மரணமாகவே மாறி நிற்கிறது.
மனித உரிமை மீறல் பற்றி பேசம் எந்த சக்தியாலும் இதனை தடுக்க முடியாத ஒரு வெளிப்படையான இராணுவ செயற்பாடாக இதனை இஸ்ரேல் முன்னிறுத்தியுள்ளது. இது பற்றி உலக பொலிஸ்காரன் அமெரிக்க எதுவும் கண்டு கொள்வதில்லை. ஏனைய ஜனநாயக தேசங்களும் இதனை கண்டு கொள்வதில்லை.
சற்று நாம் அந்த குழந்தையாக எம்மை யோசித்து பார்த்தால், அல்லது எமது குழந்தையை இவ்வாறு காஷ்மீரில் இந்திய இராணுவமோ, செச்சினில் ரஷ்ய இராணுவமோ செய்வது போன்று சற்று கற்பனை செய்து பாருங்கள்... அந்த பிஞ்சு நெஞ்சில் எத்தனை பயங்கள். எத்தனை அச்சங்கள். இந்த போரியல் நடைமுறையை உலகில் யாரும் செய்வதில்லை. ஆனால் இஸ்ரேல் செய்கிறது. இது தான் உலகின் புதிய நீதி ஒழுங்கு. அந்த குழந்தை ஒரு பலஸ்தீனியன் என்பதனாலேயே உலகம் மௌனிக்கிறது. அதே குழந்தை ஒரு பிரித்தானிய, பிரான்சிய, ஜேர்மனிய, கனேடிய, இந்திய குழந்தையாக இருந்தால் எவ்வளவு மனித உரிமை பற்றி உலகம் பேசும். போர் குற்றம் பற்றி கொடி பிடிக்கும்.....
இதிலிருந்து எமக்கு ஒன்றை தெளிவாக விளங்க முடியும். எம்மை படைத்தவன் மட்டுமே காக்க முடியும் என்பதே அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக