செவ்வாய், மே 01, 2012

போபர்ஸ்:என்.டி.ஏ அரசும் தவறிழைத்துள்ளது – ஆர்.எஸ்.எஸ்!

புதுடெல்லி:25 ஆண்டுகள் பழமையான போபர்ஸ் ஊழல் வழக்கை விசாரணை நடத்துவதில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மட்டுமல்லாது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் தவறிழைத்துள்ளது என்று சங்க்பரிவார தீவிரவாத அமைப்புகளின் தலைமையான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ பத்திரிகையில் வெளியான தலையங்கத்தில் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து நாட்டை ஆண்ட இதர அரசுகளும் குற்றவாளிகளை தப்பிவிக்க அனுமதித்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
யார் குற்றவாளி என்பது காங்கிரஸை தொடர்ந்து ஆட்சிபுரிந்த பா.ஜ.க உள்ளிட்ட அரசுகளுக்கும் தெரியும் என்று ஆர்.எஸ்.எஸ் ஏட்டின் தலையங்கம் கூறுகிறது.
வி.பி.சிங் அரசையும் விமர்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் ஏடு, சோனியா காந்தி குவாத்ரோச்சிக்கு நெருக்கமானவர் என்று தெரிந்த பிறகும் அவரது பெயர் விசாரணையில் சேர்க்காதது ஆச்சரியமானது என்று கூறுகிறது.
அதேவேளையில் இத்தலையங்கத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.கவின் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, என்.டி.ஏ அரசு சோனியா காந்தியை பாதுகாக்கவில்லை என்று கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக