செவ்வாய், மே 01, 2012

அஸ்ஸாம் படகு விபத்தில் 103 பேர் பலி

கவுகாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 103 பேர் இறந்தனர். 100 க்கும் அதிகமானோரை காணவில்லை.
அஸ்ஸாம்,துப்ரிகட் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா நதியில் 300 பேர்களுடன்   சென்றுகொண்டிருந்த  படகு ஒன்று நேற்று மாலை 4.20 மணியளவில் வீசிய சூறாவளியால் திடீரென கவிழ்ந்தது.

இதில் 103 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள். பயணம் செய்தவர்களில் 25  பேர் நீந்திக் கரை சேர்ந்தனர் என்றார் ஆட்சியர். மேலும் 100 பேரை காணவில்லை. மீட்பு நடவடிக்கைகள்  முடுக்கிவிடப்பட்டுள்ளன.
படகு விபத்தைக் குறித்து அறிந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், அஸ்ஸாம் முதல்வர்  தரூண் கோகோயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது இரங்கலைத்  தெரிவித்தார். மேலும், மாநில அரசுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் அவர்  உறுதி கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு  தனது ஆழ்ந்த இரங்கலை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக