இன்று காலை சென்னையில் இருந்து 106 பயணிகள், 5 சிப்பந்திகளுடன் கொச்சிக்கு சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் (எண் AI 520) நடுவானில் எரிபொருள் கசிவதை விமானிகள் கண்டுபிடித்தனர்.
பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா துபாய் விமானம்:
அதே போல கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா
விமானம் 148 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் காலை 10 மணிக்கு புறப்பட்டது.
அப்போது விமானத்தின் வலது பக்க என்ஜின் அருகே இறக்கையில் பறவை மோதியது. இதில் என்ஜினின் இரு பிளேடுகள் சேதமடைந்துவிட்டன. இதையடுத்து விமானத்தில் இருந்த எரிபொருள் அனைத்தும் கடலில் கொட்டப்பட்டு அடுத்த 40 நிமிடங்களில் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு விமானத்தில் துபாய் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக