கார்தூம்:தெற்கு சூடானுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் பகுதிகளில் சூடான் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. சூடானில் கோர்டோஃபான், வைட் நைல், ஸெனார் ஆகிய மாநிலங்களில் எல்லை மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிபர் ஒமர் அல் பஷீர் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் அகண்ட சூடான் துண்டிக்கப்பட்டு தெற்கு சூடான் உருவானது.
பின்னர் கடந்த ஒரு மாத காலமாக இரு நாடுகள் இடையே எல்லை தொடர்பான பிரச்சனை தீவிரமடைந்துள்ள சூழலில் ஒமர் அல் பஷீரின் நடவடிக்கை அமைந்துள்ளது.
தெற்கு சூடானின் கப்பல் போக்குவரத்தை தடுப்பதே அவசர நிலை பிரகடனத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அவசர நிலை பிரகடனப்படுத்திய பகுதிகளில் வாழும் அகதிகள் ஒருவாரத்திற்குள் அங்கிருந்து வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தெற்கு கார்த்தூமில் 12 ஆயிரம் தெற்கு சூடான் நாட்டவர் பிரிவினையைத் தொடர்ந்து அகதிகளாக வாழ்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக