திங்கள், ஏப்ரல் 08, 2013

முஸ்லிம்களை தீய சக்திகளாக சித்தரிக்கும் ஊடகங்கள்!– மார்க்கண்டேய கட்ஜு!

ஹைதராபாத்: பொறுப்பற்ற ஊடக பணியின் மூலமாக ஊடகங்கள் முஸ்லிம் சமுதாயத்தை தீய சக்திகளாக சித்தரிப்பதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

தி ஹிந்து பத்திரிகை சார்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட ‘”Reporting Terror: How Sensitive is the media?” என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினார் கட்ஜு. அப்பொழுது அவர் கூறியது:பாரபட்சமான அணுகுமுறைகளால் தாங்கள் அநீதிக்கு ஆளாக்கப்படுகிறோம் என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே அதிகரித்து வருகிறது.
ஒரு குண்டுவெடிப்போ அல்லது அதற்கு சமமான நிகழ்வுகளோ நடக்கும்பொழுது சில மணிநேரங்களிலேயே இதன் பொறுப்பை இந்தியன் முஜாஹிதீனோ, ஹர்கத்துல் ஜிஹாதி இஸ்லாமோ அல்லது வேறு ஏதேனும் முஸ்லிம் அமைப்புகளோ ஏற்றுக்கொண்டதாக கூறும் ஈ-மெயிலோ, எஸ்.எம்.எஸ் செய்தியோ கிடைத்ததாக தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிடும். இச்செய்தியை யாரேனும் விஷமத்தனமாக அனுப்பியிருக்கலாம். ஆனால், அன்றைய தினம் தொலைக்காட்சி சேனல்களிலும், மறு தினம் பத்திரிகைகளிலும் இதே செய்தி வெளியாகும். இதன் மூலம் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்ற செய்தியை ஊடகங்கள் வழங்குகின்றன.
முஸ்லிம்கள் என்றால் குண்டு வைப்பர்கள் என்று பொது மக்கள் கருதுவதற்கு இச்செய்திகள் காரணமாகின்றன. இத்தகைய செய்திகள் மூலம் வகுப்புவாதத்திற்கு ஊக்கமளிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் வேலைவாய்ப்புகளிலும், வங்கிக் கடன்களை பெறுவதிலும் பாரபட்சத்தை அனுபவிக்கின்றார்கள். இது மாபெரும் அநீதியாகும்.
அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக 15 ஆம் தேதி துவங்கவிருக்கும் அரசு சாரா அமைப்பின் (தி கோர்ட் லாஸ்ட் ரிஸார்ட்) நான் இதன் முதன்மை காப்பாளர் பொறுப்பை(chief patron) ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு கட்ஜு கூறினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக