முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பாக, போர் விமானங்கள் வாங்குவதில் இடைத்தரகராக செயல்பட்டதாக 'விக்கிலீக்ஸ்' இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
1970ம் ஆண்டுகளில் சுவீடன் நிறுவனமான சாப்-ஸ்கேனியா (Saab-Scania) என்ற நிறுவனம் இந்தியாவிற்கு விக்கென் (Viggen) போர் விமானங்களை விற்க முயன்ற போது அதற்கு இடைத்தரகராக ராஜீவ் காந்தி செயல்பட்டதாகவும், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜீவிற்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சுவீடன் தூதரகத்தின் அதிகாரி மூலம் தகவல் கிடைத்ததாகவும், இதன்படி ராஜீவை ஏர் இந்தியாவில் பைலட்டாக பணியாற்றுவதாக மட்டுமே அறிவதாகவும், அவரை தொழில் முனைவோராக இப்போதுதான் அறிகிறோம் என்று சுவீடன் தூதரகத்தில் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 'விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த பேரத்தில் சாப்-ஸ்கேனியா வெற்றி பெறவில்லை என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, பிரிட்டனிடமிருந்து ஜாகுவார் விமானங்களை வாங்க விரும்பவில்லை என்ற தகவலும் சுவீடனிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக