- கவர்னர் மற்றும் தலைமை நீதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் புதிய
லோக் ஆயுத்தா சட்ட மசோதா குஜராத் சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின்படி லோக் ஆயுக்தா நீதிபதியை இனி கவர்னர் நேரடியாக நியமிக்க முடியாது. முதல் மந்திரி முன் மொழிவதை கவர்னர் வழிமொழிய வேண்டும் என்னும் அளவிற்கு புதிய லோக் ஆயுக்தா சட்டத்தில் கவர்னரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ.மேத்தாவை கவர்னரும், ஐகோர்ட் உயர் நீதிபதியும் நியமித்தது செல்லாது என்று முதல் மந்திரி நரேந்திர மோடி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய லோக் ஆயிக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மசோதா நிறைவேறுவதற்கு முன்னர், சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஷங்கர்சின் வகேலா கூறியதாவது:-
லோக் ஆயுக்தா நீதிபதி ஆர்.ஏ.மேத்தாவை கண்டு மோடி மிகவும் பயப்படுகிறார். தனது ஆட்சியின் ஊழலை அவர் அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சம் தான் இந்த புதிய லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணம். ஊழல்களை திரையிட்டு மறைக்கும் இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.
இவ்வாறு கூறிய அவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
புதன், ஏப்ரல் 03, 2013
புதிய லோக் ஆயுக்தா சட்டம் : குஜராத் சட்டசபையில் நிறைவேற்றம் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக