ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில், தலிபான் தலைவர் முல்லா ஒமர் போட்டியிட வேண்டும் என்று அதிபர் ஹமீத் கர்சாய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களை தொடர்பு கொண்டு வருகிறது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தலிபான்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதிபர் பதவிக்கு முல்லா ஒமர் போட்டியிட்டு, அவருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ மக்கள் வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.
கத்தார் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியதும் கர்சாய் இந்த வேண்டுகோளை வைத்துள்ளார். மேலும் கத்தார் நாட்டில் அலுவலகம் தொடங்குவதற்கு கர்சாய் அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. எனினும் இந்த அலுவலகம் திறப்பு குறித்து கத்தார் சுற்றுப்பயணத்தின்போது விவாதிக்கப்படவில்லை.
மேலும் ஆப்கான் அரசை மேற்கத்திய நாடுகள் அவமதிப்பதாகவும் கர்சாய் குற்றம் சாட்டினார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக