புதன், ஏப்ரல் 03, 2013

எல்லைத் தாண்டிய சிறுமியை ஒப்படைத்தது பாகிஸ்தான் இராணுவம்!

அறியாமல் எல்லைத் தாண்டிச் சென்றுவிட்ட இந்தியச் சிறுமியை பத்திரமாக இந்தியாவிடமே பாகிஸ்தான் இராணுவம் திருப்பி ஒப்படைத்துள்ளது. இராஜஸ்தானிலுள்ள பிகானிர் அருகே இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதி எல்லையோரமாக தனக்குச்  சொந்தமான வயலில் கடந்த 29ம் தேதி ஓர் இந்திய விவசாயி தனது 7 வயது மகள் பூஜாவை அழைத்துக் கொண்டு  வந்துள்ளார்.


வயல் வேலைகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது, விளையாடிக் கொண்டிருந்த பூஜா, எல்லையோரமாக உள்ள வேலிக்குள் நுழைந்து பாகிஸ்தானுக்குள் சென்று விட்டிருக்கிறாள். இதை அந்த விவசாயி கவனிக்கவில்லை. வேலை முடிந்து மகளை தேடிப் பார்க்கும் விதமாக வேலியோரம் சென்று பார்த்த அவர், பூஜாவின் காலடித்தடம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதை உறுதிப்படுத்திக் கொண்டு, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் இச்சம்பவம் குறித்து முறையிட்டு, தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்படி, இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் இராணுவம் கொடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி சிறுமியை இந்திய வீரர்கள் முன்னிலையில் தந்தையிடம் ஒப்படைத்தனர். தொலைந்த மகள் திரும்பப் பெற்ற அந்த விவசாயி ஆனந்த கண்ணீர் வடித்து பாகிஸ்தான் இராணுவத்திற்கு நன்றி கூறினார்.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக