வியாழன், ஏப்ரல் 04, 2013

அடுத்த பிரதமர் என்று தூக்கி நிறுத்தப்படும் மோடியின் முகத்திரை கிழிந்தது !

பிரதமர் பதவிக்கு பா.ஜ.க.வினரால் தூக்கி நிறுத்தப்படும் மோடிமீது தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குஜராத் தில் லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகளால், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம்
ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள் ளது. கடந்த, 2009- 2010 மற்றும் 2010-2011ஆம் ஆண்டிற்கான, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை, மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த லஞ்சம், ஊழல் முறைகேடுகளால், மாநில அரசிற்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற் பட்டு உள்ளதாக கூறப்பட்டுள் ளது. மேலும், முறைகேடுகளை தடுக்க, மோடி அரசு தவறிவிட் டது என்றும், கணக்கு தணிக்கை அதிகாரி, அறிக்கையில் தெரிவித் துள்ளார். கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் மோடி தலைமையிலான அரசுமீது கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

டமாநில அரசுக்கு சொந்த மான குஜராத் மாநில பெட் ரோநெட் லிமிடெட்டுடன் ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு ஒரு உடன்படிக்கை செய்துகொண் டது. பருச் மாவட்டத்தில் உள்ள பத்புட் என்ற இடத்திலிருந்து எரிவாயுவை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு குழாய் வழியாக எடுத்துச் செல்ல இந்த உடன் படிக்கை வழி செய்தது.

ரிலையன்ஸ் நிறுவனம் எரி வாயுவை எடுத்துச் சென்றபோது, ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப் பட்ட விதிமுறைகளை மீறி ஒற்றை கட்டண வீதத்தின்படி கட்டணம் வசூலிக்கப்பட்டுள் ளது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதற்கு குஜராத் மாநில பெட்ரோநெட் லிமிடெட்தான் பொறுப்பு.

டமாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம், அதானி பவர் லிமி டெட்டுடன் செய்து கொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் விதி முறைகள் மீறப்பட்டுள்ளது. இதில் மின்சாரம்  வழங்கப்படாத தால், உரிய அபராதம் விதிக்கப் படவில்லை. இதன் மூலம் அதானி பவர் லிமிடெட் ரூ.160.26 கோடி பலன் பெற்றுள்ளது.  ட சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் செய்ததாக கூறப் படுகிற ஆக்கிரமிப்புகளை மாநில அரசு முறைப்படுத்தியது சரியல்ல. 7 லட்சத்து 24 ஆயிரத்து 897 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது. அந்த நிறுவனம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அரசு, சதுர மீட்டர் ஒன்றுக்கு தற்காலிக மதிப்பாக ரூ.700 என நிர்ணயிக் கப்பட்டது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக குஜராத் அரசு விளக்கம் அளிக்கையில், அந்த நிறுவன திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்றப்படாததால் நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி இழப்பை சந்தித்தது என கூறியதை ஏற்க முடியாது. * போர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தை  கொடுத்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதில் மாநில அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக