- பாகிஸ்தானில் வரும் மே மாதம் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கண்காணிக்க 100 பார்வையாளர்களை அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
- ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினரான மைகேல் காலெர் தலைமையில் இந்தக் குழு பாகிஸ்தான் செல்ல உள்ளது.
- இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைகள் தலைவர் கேத்தரின் ஆஸ்டன் கூறியதாவது:-
- பாகிஸ்தானில் நடைபெற உள்ள தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதன்முறையாக ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடக்கப் போகிறது. புதிய அரசு அமையப்போகிறது.
- மைகேல் தலைமையிலான இந்தக் குழு சிறந்த முறையில் செயல்பட்டு பாகிஸ்தான் வாக்காளர்களர்களுக்கு தேர்தல் முறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
- இவ்வாறு அவர் கூறினார்.
வியாழன், ஏப்ரல் 04, 2013
பாகிஸ்தான் தேர்தலை கண்காணிக்க 100 பார்வையாளர்கள்: ஐரோப்பிய ஒன்றியம் அனுப்புகிறது !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக