வெள்ளி, ஏப்ரல் 05, 2013

குஜராத்தில் தீக்குளிப்பு சாவு எண்ணிக்கை 3 ஆனது !

  • குஜராத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவதை  எதிர்த்து தீக்குளித்தவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 3 ஆனது.
  • குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கூட்டுறவுத் வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான சோட்டூநகர் குடியிருப்பு உள்ளது. அங்குள்ள பொது இடத்தில் நேபாள நட்டை சேர்ந்த பரத் மான்சிங் என்பவரது குடும்பம் குடிசை கட்டிக் கொள்ள சங்க உறுப்பினர்கள் அனுமதி அளித்தனர். ஆனால், நேபாள குடும்பத்தினர் 8000 சதுர அடி பரப்பளவு கொண்ட பொது இடத்தை சுற்றிலும் சுவர் அமைத்து பெரிய வீடு கட்டிக்கொண்டனர்.
  • இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றத்தின் உதவியை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் நாடினர். இதை தொடர்ந்து மான்சிங் குடும்பத்தினர் வீட்டை சட்டவிரோதமாக கட்டியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வீட்டில் இருந்து அவர்களை வெளியேற்றவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அவர்களை வெளியேற்ற ராஜ்கோட் மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ராஜ்கோட்டில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று முன்தினம் தீக்குளித்தனர்.
  • இதில், பரத் மான்சிங்(40) நேற்று முன்தினம் இறந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது மனைவி ஆஷா(35), தம்பி கிரிஷ்(27) ஆகியோர் நேற்று அதிகாலை இறந்தனர். இதையடுத்து சாவு எண்ணிக்கை 3 ஆனது. ரேகா(30), வசுமதி(60) ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இந்த சம்பவத்தை கண்டித்து ராஜ்கோட்டில் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இதனால், ராஜ்கோட்டில் கல்வி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று மூடிக்கிடந்தன. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. இது தொடர்பாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக