கான்பூர் - மாமூல் தராததால் உணவக உரிமையாளரின் ஐந்து வயது மகளை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் அக்கிரமக்காரர்கள் வீசிய கொடூரம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சி்வ்ராஜ்பூர் என்ற இடத்தில் உள்ளது சக்ரேதி கிராமம். இங்கு அவ்னீஷ் பாண்டே என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று ( 08.12.12) தனது உணவகத்தில் மனைவி ரீனா மற்றும் மகள் சவும்யா ஆகியோருடன் இருக்கும்போது, ரவுடிகளான விபின் மற்றும் சோட்டு ஆகியோர் மாமூல் கேட்டு வந்துள்ளனர். இந்த ரவுடிகள் தினமும் இந்தப் பகுதியில் மாமூல் வசூலித்து வந்துள்ளனர். நேற்று வியாபாரம் ஆகாததால் பணம் இல்லை என அவ்னீஷ் தெரிவித்துள்ளார். பணம் இல்லை என்றால் உணவு தரும்படி ரவுடிகள்
திடீரென அங்கு பயத்துடன் நின்று கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி சவும்யாவை, அந்த அக்கிரமக்காரர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வீசியுள்ளனர். இதனால் சவும்யாவின் உடல் வெந்தது. உடனடியாக அவளது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சவும்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ரவுடிகள் இருவரையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தினால் அங்குள்ள மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பெண்கள் நலன் மற்றும் கலாசார துறை அமைச்சராக உள்ள அருணாகுமாரியின் சொந்த தொகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக