ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதரபாத் பேகம்பேட் பழைய விமானத்தளத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பயிற்சி விமானங்களும் 1 ஹெலிகாப்டரும் எரிந்து சாம்பாலாயின. இதன் மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும் மற்றும் ஏர்போர்ட் நிர்வாக தீயணைப்பு வண்டிகளூம் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து உயர்மட்ட சி.ஐ.டி. விசாரணைக்கு முதல் மந்திரி கிரண் குமார்
ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சார்ட் சர்க்கியூட் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணை அறிக்கை கூறியுள்ளது.
ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சார்ட் சர்க்கியூட் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணை அறிக்கை கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக