சென்னை:நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர்.முஸ்லிம்களின் மனதை புண்படுத்திய இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும், அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; இணையதளத்திலிருந்து அத்திரைப்படக் காட்சிகளை நீக்கவேண்டும்
முன்னதாக இம்முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் தடையை மீறி இப்போராட்டம் நடைபெற்றது.
தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஹனிபா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முழக்கங்களை எழுப்பினார். மூத்த தலைவர் ஹைதர் அலி, தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் பி.எஸ்.ஹமீது மற்றும் கோவை செய்யது உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தால் அண்ணாசாலை பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. சிலர் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்கினர். மேலும் அமெரிக்க கொடியும் எரிக்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக