சனி, செப்டம்பர் 15, 2012

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கு சிபாரிசுச் செய்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மரணம். . .

Justice Ranganath Misra passes awayபுவனேஷ்வர்:முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கு சிபாரிசுச் செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா(வயது 86) மரணமடைந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு தனியார் மருத்துவமனையில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. 1926 நவம்பர் 25-ஆம் தேதி மிஸ்ரா பிறந்தார். 1950-ஆம் ஆண்டு ஒரிஸ்ஸா உயர்நீிதிமன்றத்தில் வழக்கறிஞரானார். 1980-ஆம் ஆண்டு ஒரிஸ்ஸா மாநில தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 1983-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி உச்சநீதிமன்ற
நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1990-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார்.
மத,மொழி சிறுபான்மையினரின் நிலைமையை ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசு 2004-ஆம் ஆண்டு நியமித்த கமிஷனின் தலைவராக இருந்தார். சிறுபான்மை மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, ஒ.பி.சி இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்கு 8.4 சதவீதம் உள் ஒதுக்கீடு, தலித்துகளுக்கு அட்டவணை சாதி இடஒதுக்கீடு ஆகியன இவரது தலைமையிலான கமிஷனின் முக்கிய பரிந்துரைகளாகும். மாநிலங்களவை உறுப்பினராகவும், தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகவும் ரங்கநாத் மிஸ்ரா பணியாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக