வியாழன், செப்டம்பர் 13, 2012

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: லிபியாவில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் பலி !

US ambassador to Libya Chris Stevensதிரிபோலி:வலது சாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான டெர்ரி ஜோன்ஸ் மற்றும் கலிஃபோர்னியாவைச் சார்ந்த சாம் பேசிலி ஆகியோர் இணைந்து உருவாகிய ‘Innocence of Muslims’ என்ற திரைப்படத்தில்  இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகவும் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் யூ ட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் முஸ்லிம்
உலகில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் லிபியா மற்றும் எகிப்தில் அமெரிக்க தூதரகத்தின் மீது ஆவேசமடைந்த மக்கள் தாக்குதல் நடத்தினர்.
லிபியாவின் பிரபல நகரமான பெங்காசியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ராக்கெட் வீச்சு தாக்குதலில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோஃபர் ஸ்டீஃபன் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 தூதரக அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இதர அமெரிக்க தூதரக பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிபியா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெங்காசியில் உள்ள அமெரிக்க தூதரகம் ராக்கெட் தாக்குதலில் முற்றிலும் நாசமடைந்துவிட்டதாக செய்தி ஏஜன்சிகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக