வதோதரா:குஜராத் மாநிலத்திற்கு உலக பிரபலமான ‘அமுல்’(AMUL) ப்ராண்டை அளித்த டாக்டர். வர்கீஸ் குரியனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாததன் மூலம் அந்நிகழ்ச்சிக்கு இழுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார் மோடி.குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின்அமைச்சரவையில் சட்ட அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா தவிர வேறு எவரும் குரியனின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் ஆனந்த் கிராமத்தில்அமுலின்
தலைமையகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வர்கீஸ் குரியனின் உடல் வைக்கப்பட்டிருந்தது. இறுதி அஞ்சலி செலுத்த மோடி வருவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனந்த் கிராமத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள நாதியாதில் கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த மோடி, வர்கீஸ் குரியனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
2004-ஆம் ஆண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் மோடியும், குரியனும் கலந்துகொண்டனர். அப்பொழுது குரியன் தனது உரையில் வெளியிட்ட விமர்சனங்கள் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் இருவருக்கும் இடையேயான உறவு முறிந்து போனது. 2 ஆண்டுகள் கழித்து குரியன் நிறுவிய இன்ஸ்ட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மெண்ட் ஆனந்த் நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருந்து விலகும் சூழல் உருவானது. 2009-ஆம் ஆண்டு மோடி அரசு மீண்டும் குரியனுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியது. ஸ்தாபக சேர்மன் என்ற நிலையில் ஜி.சி.எம்.எம்.எஃப் நிறுவனம் வழங்கியிருந்த கார், சமையல்காரர், மெய்க்காப்பாளர் உள்ளிட்ட வசதிகளை வாபஸ் பெறக்கோரி கூட்டுறவு சங்க பதிவாளர் பெடரேசனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் ஜி.சி.எம்.எம்.எஃப் அதிகாரிகள் மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து மேற்கண்ட வசதிகள் நீடித்தன.
இந்நிலையில் குரியன் மீதான காழ்ப்புணர்வே அவரது இறுதிச் சடங்கிலும் மோடி பங்கேற்காததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலைச் செய்த இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய இரத்தக் கறைப் படிந்த மோடி, இந்திய வெண்மைப் புரட்சியின் நாயகனாக போற்றப்படும் வர்கீஸ் குரியனின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்டிருந்தால், அச்சம்பவம் குரியனுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாக மாறியிருக்கும். எனவே மோடி இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாததன் மூலம் குரியனுக்கு அவமதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக