புதுடெல்லி:இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளை இணையதளங்களில் இருந்து நீக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திரைப்படத்தின் காட்சிகளை அனைத்து இணையதள பக்கங்களில் இருந்தும் நீக்கம் செய்யுமாறு ஜம்மு-கஷ்மீர் மாநில அரசு சமர்ப்பித்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகம், கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்ஃபான்ஸ் டீம் இந்தியாவின்
இயக்குநர் ஜெனரலுக்கு அனுப்பியுள்ளது.
இணையதள பக்கங்களில் இருந்து இத்திரைப்படத்தின் காட்சிகள் உடனடியாக நீக்கம் செய்வோம் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக